தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

’கரோனாவை கட்டுப்படுத்துவதில் வேகமாக முன்னேறும் இந்தியா’

டெல்லி: மற்ற நாடுகளைவிட இந்தியாவில் கரோனாவிலிருந்து மீண்டவர்களின் விகிதம் அதிகமாக இருப்பதாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சுகாதார அமைச்சகத்தின் இணை செயலாளர் லாவ் அகர்வால்
சுகாதார அமைச்சகத்தின் இணை செயலாளர் லாவ் அகர்வால்

By

Published : May 21, 2020, 4:34 PM IST

இந்தியாவில் கரோனா பெருந்தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது போலவே, குணமடைபவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துவருகிறது.

இது குறித்து சுகாதார அமைச்சகத்தின் இணைச் செயலர் லவ் அகர்வால், “இந்தியாவில் 42 ஆயிரத்து 298 பேர் கரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். நாட்டில் ஊரடங்கை பிறப்பிக்கும்போது குணமடைந்தவர்களின் விகிதம் 7.1 விழுக்காடு, இரண்டாம்கட்ட ஊரடங்கில் 11.42 விழுக்காடு, மூன்றாம் கட்ட ஊரடங்கில் 26.59 விழுக்காடு, தற்போது 39.62 விழுக்காடு எனப் படிப்படியாக உயர்ந்துள்ளது.

ஒட்டுமொத்த உலகத்துடன் ஒப்பிடும்போது, லட்சத்தில் 62 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவின் மக்கள் தொகையில் லட்சத்திற்கு 8 பேர் வீதம், 0.2 விழுக்காட்டு விகிதத்தில் பாதிக்கப்படுள்ளனர். இது உலகளவில் 4.2 விழுக்காட்டு விகிதமாகும்.

இந்தியாவைப் போல மக்கள்தொகை கொண்ட 15 நாடுகளில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகமாகவுள்ளது. அதில் ஆறு நாடுகளில் இரண்டு லட்சத்திற்கும் அதிகமானோருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது” என்றார்.

இதையும் படிங்க: ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிக்காட்டுதல்கள் வெளியீடு...!

ABOUT THE AUTHOR

...view details