இந்தியாவில் கரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இதனைக் கட்டுப்படுத்தும் விதமாக கடந்த மார்ச் 25 முதல் நாடு முழுவதும் இரண்டு முறை அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு மே 17வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு நேற்று அறிவித்திருந்தது.
தற்போது ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளதால் மே 17 வரை அனைத்து பயனாளர்களின் ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து ரயில்வே துறை வெளியிட்ட அறிக்கையில், "கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைளின் தொடர்ச்சியாக, மே 17 வரை நாட்டில் உள்ள அனைத்து பயணிகளின் ரயில் சேவைகளையும் ரத்து செய்வதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட விதிமுறைகளின் படி பல்வேறு மாநிலங்களில் சிக்கித் தவிக்கும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களை மீட்கும் வகையில் சிறப்பு ரயில் சேவைகள் இயக்கப்படும்" என்று குறிப்பிட்டுள்ளது.
இதையும் படிங்க:ஆரோக்ய சேது' செயலியை அரசு,தனியார் ஊழியர்கள் தரவிறக்கம் செய்ய உத்தரவு!