கரோனா வைரஸ் நோய் இந்தியாவில் வேகமாக பரவிவருகிறது. வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், பொருளாதாரம் பெரும் பாதிப்படைந்துள்ளது. மேலும், வரலாறு காணாத அளவு உலகளாவிய வளர்ச்சி குறையும் என பொருளாதார வல்லுநர்கள் கருத்துக் கூறிவருகின்றனர்.
இதனிடையே, பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையிலான திட்டங்கள் குறித்து முன்னாள் ஆர்பிஐ ஆளுநர் ரகுராம் ராஜனிடம் ராகுல் காந்தி ஆலோசனை நடத்தினார். இதனையடுத்து, நோபல் பரிசு வென்ற அபிஜித் பானர்ஜியுடன் ராகுல் ஆலோசனை நடத்திவருகிறார்.
மக்களிடையே பணத்தை கொண்டு போய் சேர்ப்பது மட்டுமே பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் என காணொலி மூலம் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அபிஜித் பானர்ஜி தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி, வங்கிகளின் திவால் நிலையை எப்படி தவிர்ப்பது, தேவையில் ஏற்பட்டுள்ள பற்றாக்குறை ஆகிய இரண்டு விஷயங்கள் மிகப்பெரிய பொருளாதார பிரச்சனைகளாக இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கரோனா வைரஸ் நோயால் ஏற்பட்டுள்ள ஊரடங்கின் காரணமாக ஏழை மக்களுக்கு உதவும் வகையில் 65,000 கோடி ரூபாய் தேவைப்படுவதாக ராகுலுடனான ஆலோசனைக் கூட்டத்தில் ரகுராம் ராஜன் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: புலம்பெயர் தொழிலாளர்களுக்கு கட்டணமில்லாத ரயில் இயக்க கோரிக்கை!