உலகளாவிய அச்சுறுத்தலாக மாறியிருக்கும் கரோனா வைரஸ் பெருந்தொற்றுநோய் இந்தியாவை ஆட்டம் காண செய்துள்ளது. குறிப்பாக, மஹாராஷ்டிரா மாநிலத்தை பெரிதும் பாதிப்படையச் செய்துள்ளது. நாளுக்குநாள் இதன் பாதிப்பு எண்ணிக்கை அங்கே தொடர்ந்து அதிகரித்துவருகிறது.
இதனிடையே, புனே கோவிட்-19 வைரஸால் 5,347 பேர் பாதிக்கப்பட்டும், 257 பேர் உயிரிழந்தும் உள்ளதாக அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகியுள்ளது.
புனேவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இன்னும் உயரும் என மஹாராஷ்டிரா அரசு அச்சப்படுகிறது. இதன் காரணமாக, அந்தப் பகுதியில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுக்க அம்மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, நேற்று (மே 23) புனேவில் உள்ள 60 தனியார் மருத்துவமனைகளின் பிரதிநிதிகளுடன் அம்மாவட்ட ஆட்சியர் கிஷோர் ராம் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் ஒன்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியர் கிஷோர் ராம், “கோவிட்-19 கட்டுப்படுத்தும் விதமாக மாவட்டத்தில் அனைத்து விதமான முன் ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. தற்போது உள்ள மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்காக இருக்கும் படுக்கை வசதிகள் போதாது என்பதால் பல இடங்களில் சிறப்பு பிரிவு ஆரம்பிக்கப்பட உள்ளது.