கரோனா வைரஸின் தீவிரம், நோயின் தன்மை மற்றும் அதன் மையப் புள்ளிகள் பற்றிய மிக முக்கிய தகவல்கள் பரிசோதனையிலிருந்து பெறப்படுகின்றன என்று காங்கிரஸ் பிரியங்கா காந்தி வலியுறுத்தினார்.
'இது போதாது, கரோனா பரிசோதனையைத் துரிதப்படுத்துங்கள்'- பிரியங்கா காந்தி - கரோனா பரிசோதனை குறித்து பிரியங்கா காந்தி
டெல்லி: கரோனா வைரஸ் சோதனை விகிதத்தை இந்தியா உடனடியாக உயர்த்த வேண்டும். இந்த முழு அடைப்பு நேரத்தில் இதற்கான முடிவுகளை வழங்க வேண்டும் என்றும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவரது ட்விட்டர் பதிவில், “இந்தியா உடனடியாக அதன் சோதனை விகிதத்தை அதிகரிப்பது அவசியமாகும். மிக முக்கிய தகவல்களான நோயின் தீவிரம், நோயின் தன்மை மற்றும் மையப்புள்ளி ஆகியவற்றை அறிந்துகொள்ள பரிசோதனை செய்யப்படுவது மிகவும் முக்கியமாகும்.
இந்த முழு அடைப்பு நடவடிக்கை என்பது நாட்டிலுள்ள மருத்துவ உள்கட்டமைப்புகளை பெரியளவில் வலுப்படுத்தி, பிற நடவடிக்கைகள் மூலம் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். அரசாங்கம், இப்போது துரிதமாக செயல்பட வேண்டும். செவிலியர், மருத்துவ ஊழியர்களுக்குப் பாதுகாப்பு உபகரணங்கள் கிடைக்கவில்லை என்றும் அவர்களின் சம்பளத்தை குறைப்பதாகவும் தகவல்கள் வெளியாகிவருகிறது.
இந்த நேரத்தில் மருத்துவ ஊழியர்களுக்கு அனைத்து ஒத்துழைப்பும் தேவை. அவர்கள் உயிர் கொடுப்பவர்கள் அவர்கள் போர் வீரர்கள் போல களத்தில் இறங்கியுள்ளனர். செவிலியர், மருத்துவ ஊழியர்களுக்குத் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்காதது, அவர்களின் சம்பளத்தை குறைப்பதன் மூலம் பெரும் அநீதி இழைக்கப்படுகிறது. இந்த 'போர் வீரர்களுக்கு' அநீதி இழைக்க வேண்டிய நேரம் இதுவல்ல, அவர்கள் சொல்வதைக் கேட்பதற்கான சரியான நேரம் இது என்று உத்தரப்பிரதேச அரசிடம் வேண்டுகோள் விடுக்கிறேன்" என்று அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.