மகாராஷ்டிரா மாநிலம் புனேவைச் சேர்ந்த 25 வயது கர்ப்பிணி ஒருவர் கடந்த ஏப்ரல் 16ஆம் தேதி கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குழந்தைப்பேறு நெருங்கிய தறுவாயில் தொடர்ந்து கரோனா சிகிச்சையும் பெற்றுவந்த இவர் தற்போது ஆரோக்கியமான நிலையில் ஆண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்துள்ளார்.
குழந்தை கரோனா தொற்று இல்லாமல் ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும், தாயிடமிருந்து பிரிக்கப்பட்டு குழந்தை தனிமைப்படுத்தப்பட்ட அறையில் வைத்து பேணப்பட்டுவருவதாகவும் மருத்துவமனை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.