தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

அக்டோபரில் தொடங்கப்படும் கோவாக்சின் தடுப்பூசியின் 3ஆம் கட்ட பரிசோதனை! - அக்டோபரில் தொடங்கப்படும் கோவாக்சின் தடுப்பூசி பரிசோதனை

லக்னோ: இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவாக்சின் தடுப்பூசி மருந்தின் மூன்றாம் கட்ட பரிசோதனை வரும் அக்டோபர் மாதத்தில் தொடங்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

covax
covax

By

Published : Sep 25, 2020, 6:56 PM IST

உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகளவில் உள்ளது. நூற்றுக்கணக்கான தடுப்பூசி மருந்துகள் பரிசோதனை கட்டத்தில் உள்ளன.

இந்நிலையில், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட “கோவாக்சின்” தடுப்பூசியை ஹைதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம் பரிசோதித்துவருகிறது. முதலாம் கட்ட பரிசோதனை வெற்றிகரமாக முடிந்ததையடுத்து, பல மாநிலங்களில் 2ஆம் கட்ட பரிசோதனை நடைபெற்றுவருகிறது. இந்த பரிசோதனையின் முதற்கட்ட முடிவுகளில் தடுப்பூசி பாதுகாப்பானது என உறுதியாகியுள்ளது.

இந்நிலையில், கோவாக்சின் மருந்தின் மூன்றாம் கட்ட பரிசோதனை அடுத்த மாதம் தொடங்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இது குறித்து பேசிய உத்தரப் பிரதேச முதன்மைச் சுகாதார செயலாளர் அமித் மோகன் பிரசாத், "பாரத் பயோடெக் உருவாக்கிய கோவாக்சின் தடுப்பூசி மருந்தின் மூன்றாம் கட்ட பரிசோதனை அக்டோபர் மாதம் லக்னோ, கோரக்பூரில் தொடங்கப்படுகிறது" எனத் தெரிவித்தார்

ABOUT THE AUTHOR

...view details