இந்தியாவில் கரோனாவால் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் மகாராஷ்டிராவில்தான் அதிக பாதிப்புகளும், உயிரிழப்புகளும் நிகழ்ந்துள்ளன. அம்மாநிலத்தில் இதுவரை 5,652 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 269 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் புனேவைச் சேர்ந்த 25 வயது நிறைமாத கர்ப்பிணி ஒருவருக்கு கடந்த ஏப்ரல் 16ஆம் தேதி கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.