கரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இருப்பினும் கரோனா வைரஸ் நாடு முழுவதும் வேகமாக பரவிவருகிறது. இதனைத் தடுப்பதற்கு மத்திய,மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
ஒடிசாவில் ஊரடங்கு நீட்டிப்பு!
13:14 April 09
புவனேஷ்வர்: கரோனா வைரஸ் அச்சத்தால் ஒடிசாவில் ஏப்ரல் 30 ஆம் தேதிவரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
மத்திய அரசு அறிவித்த ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 14ஆம் தேதியோடு முடிவடையும் நிலையில், கரோனா தொற்று இந்தியாவில் குறைந்தபாடில்லை. இதனால், ஊரடங்கை நீட்டிக்குமாறு பல்வேறு மாநில முதலமைச்சர்கள், நிபுணர்கள் ஆகியோர் பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில், கரோனா வைரஸ் காரணமாக ஒடிசாவில் ஊரடங்கை ஏப்ரல் 30 ஆம் தேதிவரை நீட்டிப்பதாக முதலமைச்சர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார். இந்த முடிவானது முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஜூன் 17ஆம் தேதிவரை அனைத்து கல்வி நிலையங்களையும் மூடக்கோரியும் அவர் உத்தரவிட்டுள்ளார். இதுவரை அம்மாநிலத்தில் கரோனாவால் 42 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் அதில், ஒருவர் உயிரிழந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:இந்தியாவில் கோவிட்-19 பாதிப்பு: மாநிலங்கள் வாரியாக முழு விவரம்