தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கொசுக்களால் கோவிட்-19 பரவுகிறதா ? - விளக்கும் அமெரிக்காவின் ஆய்வு! - பிஆர்ஐ

வாஷிங்டன் : அமெரிக்காவின் கன்சாஸ் மாகாண பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட புதிய ஆய்வில், கோவிட்-19 வைரஸ் தொற்று நோய் கொசுக்களால் மக்களிடம் பரவாதென உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொசுக்களால் கோவிட்-19 பரவுகிறதா ? - விளக்கும் அமெரிக்காவின் ஆய்வு!
கொசுக்களால் கோவிட்-19 பரவுகிறதா ? - விளக்கும் அமெரிக்காவின் ஆய்வு!

By

Published : Jul 18, 2020, 8:17 PM IST

அமெரிக்காவில் இருந்து வெளிவரும் நேச்சர் சயின்டிஃபிக் ரிப்போர்ட் எனும் மருத்துவ ஆய்வு இதழில், "கரோனா வைரஸ் தொற்று கொசுக்களின் மூலம் பரவுகிறதா ? " என்ற தலைப்பில் வெளியாகியுள்ள கட்டுரையில், இந்த ஆய்வு குறித்து விளக்கப்பட்டுள்ளது.

அதில், அமெரிக்காவின் கன்சாஸ் மாகாண பல்கலைக்கழகத்தின் பயோ செக்யூரிட்டி ரிசர்ச் இன்ஸ்டிடியூட் (பி.ஆர்.ஐ) ஆராய்ச்சி துணைத் தலைவரும், இயக்குநருமான ஸ்டீபன் ஹிக்ஸ் தலைமையில், பி.ஆர்.ஐ மற்றும் கால்நடை மருத்துவக் கல்லூரியின் ஆராய்ச்சியாளர் இணைந்து மனிதர்களுக்கு கொசுக்கள் மூலமாக கரோனா வைரஸ் தொற்றுநோய் பரவுகிறதா என்பது குறித்து ஆராய்ச்சி செய்துள்ளனர்.

கோவிட்-19 தொற்று நோயைப் பரப்பும் சார்ஸ்- கோவி-2 வகை வைரஸானது, கொசுகள் மூலம் பரவுகிறதா ? இல்லையா ? என்பதை ஆராய்ந்தபோது, அவை மூலமாக பரவாதென்ற உண்மையை ஆவணப்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து உயிரியல் பாதுகாப்புத்துறை நோயறிதல் மருத்துவம் மற்றும் நோய் குறியியல் பேராசிரியருமான ஸ்டீபன் ஹிக்ஸ் கூறுகையில், "உலக சுகாதார நிறுவனம் கொசுக்களால் வைரஸைப் பரப்ப முடியாது என்று திட்டவட்டமாகக் கூறியுள்ள நிலையில், அதன் கூற்றை அறிவியல் பூர்வமாக ஆதரிக்கும் உறுதியான தரவை வழங்கும் நோக்கமே எங்கள் ஆய்வின் முதன்மை நோக்கமாக இருந்தது.

பி.ஆர்.ஐ.யின் உயிரியல் பாதுகாப்பு நிலை -3 நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில், நோய் பரப்பும் ஏடிஸ் ஈஜிப்டி, ஏடிஸ் அல்போபிக்டஸ் மற்றும் குலெக்ஸ் குயின் கேஃபாசியஸ் ஆகிய மூன்று வகையான கொசுக்களில், வைரஸ் தொற்று பாதிப்பின் அடிப்படைகள் பிரதிபலிக்கவில்லை என்பதைக் கண்டறிய முடிந்தது.

இதன் காரணமாக, மனிதர்களுக்கு கொசுக்கள் மூலமாக வைரஸ் தொற்றுப் பாதிப்பு பரவாது என உறுதி செய்யப்பட்டது. கோவிட்-19 உள்ளிட்ட பிற ஆபத்தான நோய்க் கிருமிகளைப் பற்றிய முழுமையான அறிவை அறிவியல் சமூகத்திற்கு அளிக்க எங்களால் முடிந்தவரை கன்சாஸ் மாகாண பல்கலைக்கழகத்தில், நாங்கள் ஆய்வு செய்து வருகிறோம்.

இந்தப் பணிகள் குறித்து நாங்கள் பெருமைப்படுகிறோம். பிஆர்ஐ மற்றும் அதன் அர்ப்பணிப்புள்ள நிறுவன ஊழியர்களின் தனித்துவமான திறன்களால், இந்த உண்மை வெளியாகி உள்ளது" என்றார்.

பி.ஆர்.ஐ.யின் ஆராய்ச்சியாளர்கள் மார்ச் மாதத்திலிருந்து, கரோனா வைரஸ் குறித்த நான்கு கூடுதல் ஆய்வுகளை செய்து முடித்துள்ளதாக அறிய முடிகிறது.

ABOUT THE AUTHOR

...view details