தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

"கரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும்வரை மக்கள் கவனக்குறைவாக இருக்க வேண்டாம்" - பிரதமர் மோடி - கரோனா நிலவரம்

கரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும்வரை மக்கள் கவனக்குறைவாக இருக்க வேண்டாம் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.

covid-19-news-from-across-the-nation
covid-19-news-from-across-the-nation

By

Published : Sep 13, 2020, 12:15 AM IST

பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் மத்திய பிரதேசத்தின் கிராமப்புறங்களில் 1.75 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட வீடுகளின் புதுமனை புகுவிழா நிகழ்ச்சியை பிரதமர் மோடி காணொலி மூலம் தொடங்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, கரோனா வைரஸ் தொற்றுக்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும்வரை மக்கள் கவனக்குறைவாக இல்லாமல் பாதுகாப்பாக இருக்குமாறு எச்சரிக்கை விடுத்தார்.

மேலும், ஏழு இந்திய மருந்து நிறுவனங்கள் கரோனா தொற்றுக்கு எதிராக தடுப்பூசி உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுவருவதாகவும் தெரிவித்தார்.

உத்தரகாண்ட்

உத்தரகண்ட் பாஜக எம்எல்ஏ உமேஷ் சர்மா கடந்த சில நாள்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில், நேற்று (செப்.12) அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதற்கிடையில், பாஜக எம்எல்ஏ வினோத் சமோலி, மாநில அமைச்சரவை அமைச்சர் மதன் கெளசிக் மருத்துவமனைகளில் இருந்து வீடு திரும்பியுள்ளனர்.

ராஜஸ்தான்

பூண்டி சிறையில் நேற்று (செப்.12) 36 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,218ஆக அதிகரித்துள்ளது. இதற்கிடையில், ஜோத்பூரில் உள்ள காவலர் பயிற்சி மையத்தில் சுமார் 50 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details