கரோனா வைரஸ் பரவல் இந்தியாவில் தீவிரமடைந்து வரும் நிலையில், 9 நாள்களில் 5 லட்சம் பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து இரண்டாவது நாளாக பாதிப்பு எண்ணிக்கை 60 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 21 லட்சத்து 14 ஆயிரத்து 140ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 42 ஆயிரத்து 518 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஜார்க்கண்ட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 678 பேருக்குப் புதிதாக கரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 16 ஆயிரத்து 542ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 154 பேர் உயிரிழந்துள்ளனர். 7 ஆயிரத்து 503பேர் கரோனா வைரஸ் சிகிச்சை முடிந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர்.
ஒடிசாவில் நேற்று (ஆகஸ்ட் 8) பாஜக எம்பி சுரேஷ் புஜாரிக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து பாதிப்பு எண்ணிக்கை 44 ஆயிரத்து 193ஆக உயர்ந்துள்ளது. அதில் 30ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
மத்தியப் பிரதேசத்தில் கரோனாவைக் கட்டுப்படுத்த குழு அமைக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அங்கு 37 ஆயிரத்து 298ஆக உள்ள நிலையில், 27 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
பிகாரில் கரோனா வைரஸ் பரவல் மேலும் தீவிரமடைந்து வருகிறது. கடந்த மூன்று நாள்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பாதிப்பு எண்ணிக்கை 75 ஆயிரத்தைக் கடந்துள்ளது. 46 ஆயிரத்து 265 பேர் கரோனா சிகிச்சைப் பெற்று வீடு திரும்பியுள்ளனர். கரோனா வைரஸ் பரிசோதனையை அதிகரிக்க மாநிலத்தில் புதிதாக ஆம்புலன்ஸ் வசதிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் 21.1 லட்சம் பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உத்தரப்பிரதேச மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 13 ஆயிரமாக உயர்ந்துள்ளது. இதுவரை 66 ஆயிரத்து 834 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் ஆயிரத்து 981 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதையும் படிங்க:மருத்துவர் பரிந்துரையின்றி உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் இருமல் மருந்து விற்ற நபர் கைது!