இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கொல்கத்தா, மும்பை, நொய்டா ஆகிய நகரங்களில் அதிவிரைவு கரோனா பரிசோதனை மையங்களை அமைத்துள்ளது. இவற்றைப் பிரதமர் நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் திறந்துவைத்தார்.
மூன்று மாநிலங்களில் அதிவிரைவு கரோனா பரிசோதனை மையங்கள் அறிமுகம்! - இந்தியாவின் கரோனா இறப்பு விவரங்கள்
டெல்லி: கொல்கத்தா, மும்பை, நொய்டா ஆகிய மூன்று நகரங்களில் அதிவிரைவு கரோனா பரிசோதனை மையங்களை பிரதமர் மோடி அறிமுகப்படுத்தினார்.
இதுகுறித்து பேசிய மோடி, "மற்ற நாடுகளை விட இந்தியா மிகச் சிறந்த நிலையில் கரோனா நடவடிக்கையில் ஈடுபட்டுவருகிறது. அதன் நீட்சியாகத்தான் இந்த அதிவிரைவு கரோனா பரிசோதனை மையங்கள் மூன்று நகரங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதன்மூலம் ஒரே நாளில் கிட்டத்தட்ட 10 ஆயிரம் பேருக்கு சோதனைகள் மேற்கொள்ளலாம்" என்றார்.
இந்தியாவின் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14 லட்சத்து 35 ஆயிரத்து 453ஆக அதிகரித்துள்ளது. அதேசமயம் இறந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆயிரத்து 771 ஆக உயர்ந்துள்ளது.