பிரபல பாலிவுட் பாடகி கனிகா கபூர் லண்டனில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு கடந்த வாரம் இந்தியா திரும்பினார். வெளிநாட்டிலிருந்து இந்தியா வருபவர்கள், தங்களைத் தாங்களே ஒரு வாரம் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற சுகாதாரத் துறையின் அறிவுறுத்தலை துளியும் கண்டுகொள்ளாமல் கனிகா கபூர் பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டுள்ளார்.
அப்படி நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் இவருடன் பாஜகவின் உத்தரப் பிரதேச சுகாதாரத் துறை அமைச்சர் ஜெய் பிரதாப் சிங் பங்கேற்றுள்ளார். கனிகா கபூருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, அமைச்சர் ஜெய் பிரதாப் சிங் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.