இதுதொடர்பாக தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்த முதலமைச்சர் மம்தா, "கோவிட்-19 பெருந்தொற்றை ஒழிப்பதற்கு மத்திய அரசு வழங்கி வரும் உதவிகள், அறிவுரைகள் ஆகியவற்றை முழுமனதுடன் ஏற்றுக்கொள்கிறோம்.
ஆனால், இந்தியா முழுவதுமுள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டங்களுக்கு (மேற்கு வங்க மாநிலம் உள்பட) மத்திய அமைச்சரவை குழுக்களை அனுப்புவது குறித்த மத்திய அரசின் திட்டம் தெளிவாக இல்லை. இது கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது.