தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கரோனா நடவடிக்கைகள் குறித்து திடீர் ஆய்வு செய்த மம்தா! - கரோனா நடவடிக்கைகள்

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் உள்ள மருத்துவமனைகளில் கரோனா நடவடிக்கைகள் குறித்து அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

கரோனா நடவடிக்கைகள் குறித்து திடீர் ஆய்வு செய்த மம்தா!
கரோனா நடவடிக்கைகள் குறித்து திடீர் ஆய்வு செய்த மம்தா!

By

Published : Mar 25, 2020, 12:22 PM IST

கரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் மோசமாகிவருகிறது. இந்தியாவில் இதுவரை ஒன்பது பேர் உயிரிழந்துள்ளதாகவும், 562 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக்வும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இதில், மேற்கு வங்கத்தில் ஒன்பது பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, வைரஸ் பரவலைத் தடுக்க அனைத்து மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன. அந்தவகையில் மேற்கு வங்க அரசும் தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

கரோனா நடவடிக்கைகள் குறித்து திடீர் ஆய்வு செய்த மம்தா!

இந்நிலையில் கரோனா வைரஸ் பாதிப்பிற்கு சிகிச்சை அளிக்கும் மூன்று மருத்துவமனைகளில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது முகக்கவசமின்றி, வெறும் கைக்குட்டையால் முகத்தை பாதி மூடியிருந்தார்.

இதையும் படிங்க...பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்!

ABOUT THE AUTHOR

...view details