தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கரோனா சூழலிலிருந்து வெளிவரும்வரை பள்ளிகளை திறக்கக்கூடாது: பெற்றோர்கள் கடிதம்...! - மத்திய அரசுக்கு கடிதம்

டெல்லி: இந்தியாவில் கரோனா சூழல் கட்டுக்குள் வரும்வரை பள்ளிகளைத் திறக்கக்கூடாது என 2.13 லட்சம் பெற்றோரிகள் கையொப்பமிட்டு மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

covid-19-lockdown-parents-concerned-over-plans-to-reopen-schools-over-2-lakh-petition-govt
covid-19-lockdown-parents-concerned-over-plans-to-reopen-schools-over-2-lakh-petition-govt

By

Published : Jun 1, 2020, 6:41 PM IST

இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் மார்ச் 25ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. அதற்கு முன்னதாக மார்ச் 16ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

இந்நிலையில் ஐந்தாம் கட்ட ஊரடங்கு உத்தரவு நாடு முழுவதும் ஜூன் 30ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தளர்வுகள் அளித்துள்ளனர். இதனிடையே பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறப்பது பற்றி மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுடன் ஆலோசனை செய்த பின்னர் முடிவு செய்யப்படும் என மத்திய அரசு தெரிவித்திருந்தது.

இதையடுத்து 2.13 லட்சம் பெற்றோர்கள் கரோனா வைரஸ் சூழல் கட்டுக்குள் வரும்வரை பள்ளிகளை திறக்கக்கூடாது என கையொப்பமிட்டு மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.

அந்தக் கடிதத்தில், '' கரோனா வைரஸ் சூழலிலிருந்து குழந்தைகளை பாதுகாப்பதற்கு வீடுகளில் எங்களால் முடிந்த அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்கிறோம். ஆனால் பள்ளிகளில் அப்படி அல்ல. பள்ளி, பள்ளி வாகனம், உணவு உண்ணும் இடம் என எங்கிருந்து வேண்டுமானாலும் கரோனா வைரஸ் பரவுவதற்கு வாய்ப்புகள் உள்ளன.

ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டபோது ஆன்லைன் வகுப்புகள் பற்றி எங்களுக்கு எவ்வித தெளிவும் இல்லை. ஆனால் இந்த இரண்டு மாதங்களில் போதுமான அளவிற்கு களப்பணிகள் செய்துள்ளோம். இதனால் கரோனா வைரஸ் சூழல் கட்டுக்குள் வரும்வரை பள்ளிகளைத் திறக்கக் கூடாது. கூடுமான வரையில் இந்த கல்வியாண்டினை ஆன் லைன் வுகுப்புகள் மூலமாகவே நடத்த வேண்டும்'' எனக் கூறப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details