தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'ரயில் - விமான சேவைகள் கோவாவில் அதிகளவில் தொடக்கம்!'

பனாஜி: ஐந்தாம் கட்ட ஊரடங்கின் தளர்வுகளால், கோவாவில் இன்று முதல் ரயில், விமான சேவைகள் அதிக அளவில் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில் போக்குவரத்து சேவை
ரயில் போக்குவரத்து சேவை

By

Published : Jun 1, 2020, 3:05 AM IST

நாட்டில் ஐந்தாம் கட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.

ரயில் போக்குவரத்து சேவை:
அதனடிப்படையில், ஜுன் 1ஆம் தேதியான இன்று முதல் கோவாவிற்கு டெல்லி, மும்பை உள்ளிட்ட நகரங்களில் இருந்து ரயில்கள் வர உள்ளன.

அங்கிருந்து வரும் பயணிகளுக்கு மருத்துவப் பரிசோனை செய்ய, எல்லா ஏற்பாடுகளையும் கோவா சுகாதாரத்துறை தயார் நிலையில் வைத்துள்ளது. கோவாவிற்கு வரும் நபர்கள் கரோனா பரிசோதனைச் சான்றோடு வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விமானப் போக்குவரத்து சேவை:

மேலும் துபாயில் உள்ள கோவா மக்கள், ஊருக்குத் திரும்பி வரும் அனுமதியை கோவா மாநில அரசு அளித்துள்ளது. அதைத் தொடர்ந்து 200 இந்தியர்களை ஏற்றிக்கொண்டு ஸ்ரீலங்கா விமானம் இன்று கோவா வரவுள்ளது.

வெளிநாடுகளிலிருந்து லண்டன் உட்பட 7 - 10 விமானங்களில், அம்மக்கள் இங்கு வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு 800 பேர் கோவா திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:டெல்லியில் பாகிஸ்தான் உயர் அலுவலர்கள் கைது!

ABOUT THE AUTHOR

...view details