தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கோவிட் - 19: இந்தியாவில் ஒரு லட்சத்தை நெருங்கும் உயிரிழப்பு

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 86 ஆயிரத்து 821 கரோனா பேருக்கு பாதிப்பு பதிவாகியுள்ளது. இதன்மூலம் பாதிப்பு எண்ணிக்கை 63 லட்சத்தைத் தாண்டியது. மேலும் நாட்டின் மொத்த கரோனா உயிரிழப்பு ஒரு லட்சத்தை நெருங்குகிறது.

COVID-19
COVID-19

By

Published : Oct 1, 2020, 11:51 AM IST

நாட்டின் கரோனா பாதிப்பு எண்ணிக்கை நிலவரத்தை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த 24 மணிநேரத்தில் 86 ஆயிரத்து 821 கரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது. அத்துடன் ஆயிரத்து 181 பேர் கரோனாவால் உயிரிழந்தனர்.

கோவிட் - 19 தற்போதைய நிலவரம்

இதையடுத்து, நாட்டின் மொத்த நோய்த் தொற்று எண்ணிக்கை 63 லட்சத்தை தாண்டியுள்ளது. இதுவரை மொத்தம் 63 லட்சத்து 12 ஆயிரத்து 584 பேர் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது 9 லட்சத்து 40 ஆயிரத்து 705 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். 52 லட்சத்து 73 ஆயிரத்து 201 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும், நாட்டில் இதுவரை 98 ஆயிரத்து 678 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

பரிசோதனை நிலவரம்

கரோனா பரிசோதனை விவரம் குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் இன்று (அக். 1) வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 14 லட்சத்து 23 ஆயிரத்து 052 பரிசோதனை மேற்கொண்டுள்ளதாகவும், இதுவரை சுமார் 7 கோடியே 56 லட்சத்து 19 ஆயிரத்து 781 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு தழுவிய பேரணி: பஞ்சாபிலிருந்து களமிறங்கும் ராகுல்

ABOUT THE AUTHOR

...view details