கரோனா வைரஸ் நோயின் கோரத் தாண்டவம் உலகையே ஆட்டி படைத்துவருகிறது. கரோனாவால் லத்தீன் அமெரிக்க நாடுகளான பிரேசில், மெக்சிகோ ஆகியவை பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன.
கரோனாவால் பாதிக்கப்பட்டோர் பட்டியலில் மெக்சிகோ நான்காவது இடத்தில் இருந்தாலும் உயிரிழந்தோர் எண்ணிக்கையில் இந்தியாவிற்கு முன்னிலையில் உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 1,023 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கரோனாவால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 60,472 ஆக அதிகரித்துள்ளது.
மெக்சிகோவில் இதுவரை 62,076 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் உயிரிழப்பை குறைக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன.
நாட்டில் கரோனா உயிரிழப்பு விகிதம் 1.86 விழுக்காடாகக் குறைந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கடந்த ஆகஸ்ட் 4ஆம் தேதியிலிருந்து 20 லட்சத்திற்கும் அதிகமாகப் பாதிப்பு பதிவாகிவருவதாக உலக சுகாதார அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாதா அளவு 75 ஆயிரத்து 760 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பாதிப்பு எண்ணிக்கை 33 லட்சத்து 10ஆயிரத்து 234 ஆக தாண்டியது.
நாடு முழுவதும் கரோனா பரிசோதனை மையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு நாள்தோறும் சராசரியாக 8 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்படுகின்றன.
இந்தியாவில் கரோனா பாதிப்புகளைக் கண்டறிவதற்காக இதுவரை மொத்தம் மூன்று கோடியே 85 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க:கரோனா மருந்தை விநியோகிப்பதற்கான வியூகம் மத்திய அரசிடம் இல்லை - ராகுல் காந்தி