உலகளவில் கரோனா பாதிப்பில் இந்தியா மூன்றாவது இடத்தில் இருக்கிறது. இச்சூழலில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, குணமடைந்தோரின் எண்ணிக்கை ஆகியவற்றை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
அதுகுறித்த தகவல் பின்வருமாறு:
கரோனா வைரசால் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 54 ஆயிரத்து 44 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 76 லட்சத்து 51 ஆயிரத்து 180 ஆக இருக்கிறது. கரோனா பாதிப்பால் நேற்று ஒரே நாளில் 717 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கையானது 1 லட்சத்து 15 ஆயிரத்து 914 ஆக அதிகரித்துள்ளது.
கரோனா பாதிப்பிலிருந்து நேற்று ஒரே நாளில் 61 ஆயிரத்து 775 பேர் மீண்டுள்ளனர். இதனால், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 67 லட்சத்து 95 ஆயிரத்து 103ஆக அதிகரித்துள்ளது. கரோனா பாதித்த 7 லட்சத்து 40 ஆயிரம் 090 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இதன் மூலம் உயிரிழப்பு 1.51 சதவீதமாக உள்ளது. குணமடைந்தோர் விகிதம் 88.81 சதவீதமாக உயர்ந்துள்ளது.
இதுவரை மொத்தம் 9 கோடி பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. நேற்று(ஆகஸ்ட்22) ஒரே நாளில் 10 லட்சத்து 83 ஆயிரத்து 608 மாதிரிகள் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.