கோவிட்-19 எனும் கரோனா தொற்று இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அஸ்ஸாம் மாநிலத்தில் நேற்று (ஜூன் 15) 151 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டதன் மூலம், அம்மாநிலத்தில் கரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 4,309ஆக அதிகரித்துள்ளது.
இதில், 2,205 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், தற்போது 2,093பேர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதுவரை அஸ்ஸாமில் கரோனா தொற்றின் காரணமாக எட்டு பேர் உயிரிழந்தனர்.