இந்தியாவில் கரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தினந்தோறும் 50 ஆயிரத்தைத் தாண்டுகிறது. கரோனாவைக் கட்டுபடுத்தும் முயற்சியில் மத்திய, மாநில அரசுகள் தீவிராக களமிறங்கியுள்ளன.
இந்தியாவில் 50 ஆயிரத்தை நெருங்கும் கரோனா உயிரிழப்புகள்! - கொரோனா வைரஸ்
டெல்லி : நாட்டில் கரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 49 ஆயிரத்து 980ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 25 லட்சத்து 89 ஆயிரத்து 682ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை 49 ஆயிரத்து 980ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோரின் எண்ணிக்கை 18 லட்சத்து 62 ஆயிரத்து 258ஆக உள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளனர்.
நாட்டில் அதிகபட்சமாக, மகாராஷ்டிர மாநிலத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஐந்து லட்சத்து 84 ஆயிரத்தைக் கடந்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டில் கரோனா பாதிப்புகள் மூன்று லட்சத்து 32 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.