பஞ்சாப் மாநிலம் ஷாஹித் பகத் சிங் நகர் மாவட்டத்திலுள்ள பங்கா நகரில் சிவில் மருத்துவனையில் சிகிச்சை பெற்று வந்த 70 வயது மதிக்கத்தக்க முதியவர் திடீரென்று உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையை அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரோனாவால் பஞ்சாப்பில் முதல் உயிரிழப்பு; இந்தியாவில் 4ஆக உயர்வு! - ஷாஹித் பகத் சிங் நகரில் கரோனா வைரஸ் பாதித்த நோயாளி மருத்துவனையில் உயிரிழப்பு
சண்டிகர்: கரோனா தொற்றால் பஞ்சாப்பைச் சேர்ந்த முதியவர் ஒருவர் உயிரிழந்ததால், இந்தியாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நான்காக அதிகரித்துள்ளது.
பஞ்சாப்
இவர் மார்ச் ஏழாம் தேதி ஜெர்மனியிலிருந்து இத்தாலி வழியாக டெல்லிக்கு வந்துள்ளார். இவருக்கு ஏற்பட்ட நெஞ்சு வலி காரணமாக சிவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். நேற்று அவருக்கு கரோனா பாதிப்பு இருந்தது உறுதிசெய்யப்பட்ட நிலையில், இன்று அவர் உயிரிழந்துள்ளார். இதனால் இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ளது.
இதையும் படிங்க:தெலங்கானாவில் ஒரே நாளில் ஏழு பேருக்கு கரோனா!