தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இந்தியாவில் 24 ஆயிரத்தை எட்டியது கரோனா பாதிப்பு! - Coronavirus India

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,429 பேருக்கு கரோனா வைரஸ் இருப்பது உறுதியானதன் மூலம், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24,506ஆக அதிகரித்துள்ளது.

COVID-19 LIVE: India's total number of cases crosses 24k mark, death toll at 775
COVID-19 LIVE: India's total number of cases crosses 24k mark, death toll at 775

By

Published : Apr 25, 2020, 11:59 AM IST

இதுதொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின்படி, ”இதுவரை நாட்டில் 24,506 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 77 வெளிநாட்டவர் உட்பட 5,062 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் அடிப்படையில் தற்போது 18, 668 பேர் மட்டுமே சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

அதேசமயம் நேற்று மாலை முதல் சற்றுமுன்வரை நாட்டில் 52 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 18 பேரும், குஜராத்தில் 15 பேரும், மத்தியப் பிரதேசத்தில் ஒன்பது பேரும், டெல்லி, மேற்கு வங்கத்தில் தலா மூன்று பேரும், தமிழ்நாட்டில் இரண்டு பேரும், பஞ்சாப், உத்தரப் பிரதேசத்தில் தலா ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

இதனால், நாட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 775ஆக அதிகரித்துள்ளது. அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ள மாநிலங்களில் மகாராஷ்டிரா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அம்மாநிலத்தில் இதுவரை 301 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதற்கு அடுத்தப்படியாக குஜராத்தில், 127 பேரும், மத்தியப் பிரதேசத்தில் 92 பேரும், டெல்லியில் 53 பேரும், ஆந்திரப் பிரதேசத்தில் 29 பேரும், ராஜஸ்தானில் 27 பேரும், தெலங்கானாவில் 26 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 25 பேரும், தமிழ்நாட்டில் 22 பேரும், கர்நாடகா, மேற்கு வங்கத்தில் தலா 18 பேரும், பஞ்சாப்பில் 17 பேரும், ஜம்மு காஷ்மீரில் ஐந்து பேரும், கேரளா, ஜார்க்கண்ட், ஹரியானாவில் தலா மூன்று பேரும், பீகாரில் இரண்டு பேரும், மேகாலயா, இமாச்சலப் பிரதேசம், ஒடிசா, அசாமில் தலா ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

அதேசமயம், நாட்டில் மற்ற மாநிலங்களைவிட மகாராஷ்டிராவில்தான் அதிகமான பாதிப்புகள் பதிவாகியுள்ளன. மகாராஷ்டிராவில் 6,817 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து, குஜராத் (2,815), டெல்லி (2,514), ராஜாஸ்தான் (2,034), மத்தியப் பிரதேசம் (1,852), தமிழ்நாடு (1,755), உத்தரப் பிரதேசம் (1,621), தெலங்கானா (984), ஆந்திர பிரதேசம் (955), மேற்கு வங்கம் (571), கர்நாடகா (474), ஜம்மு காஷ்மீர் (454), கேரளா (450), பஞ்சாப் (298), ஹரியானா (272), பீகார் (223), ஒடிசா (94), ஜார்க்கண்ட் (57), உத்தரகாண்ட் (48), இமாச்சலப் பிரதேசம் (40), சத்தீஸ்கர் (36), அசாம் (36), சண்டிகர் (27), அந்தமான் நிக்கோபார் தீவுகள் (27), லடாக் (20), மேகாலயா (!2), கோவா (7), புதுச்சேரி (7), மணிப்பூர் (2), திரிபுரா (2), மிசோரம் (1), அருணச்சால பிரதேசம் (1) மாநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன” என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:கரோனா பரிசோதனைக் கருவியை உருவாக்கிய டெல்லி ஐஐடி

ABOUT THE AUTHOR

...view details