தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நாட்டில் கரோனா: 24 மணி நேரத்தில் பாதிப்பு 19,459

டெல்லி: கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 19 ஆயிரத்து 459 ஆக அதிகரித்துள்ளது. 380 பேர் உயிரிழந்துள்ளனர்.

COVID-19
COVID-19

By

Published : Jun 29, 2020, 10:18 AM IST

நாட்டில் கரோனா பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில், உலகளவில் விரைவில் ரஷ்யாவை இந்தியா முந்தும் எனக் கூறப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 19 ஆயிரத்து 459 ஆக அதிகரித்துள்ளது. 380 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதன்மூலம், நாட்டில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை ஐந்து லட்சத்து 48 ஆயிரத்து 318 ஆக உள்ளது. அதில் இரண்டு லட்சத்து 10 ஆயிரத்து 120 பேருக்கு மருத்துவம் அளிக்கப்பட்டுவருகிறது.

மேலும், மூன்று லட்சத்து 21 ஆயிரத்து 723 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மொத்தம் 16 ஆயிரத்து 475 பேர் உயிரிழந்துள்ளனர். இத்தகவலை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் எல்லைப் பாதுகாப்புப் படையினர் 21 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. 18 பேர் குணமடைந்துள்ளனர். மொத்தம் 305 வீரர்கள் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். 655 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனை எல்லைப் பாதுகாப்புப் படை உறுதிப்படுத்தியுள்ளது.

பெங்களூருவில் கடந்த 23ஆம் தேதி ஆயிரத்து 556 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டது. இது நேற்று (ஜூன் 28) இருமடங்கானது, அதாவது மூன்றாயிரத்து 419 பேருக்கு கரோனா இருப்பது சோதனையில் தெரியவந்தது. இது கர்நாடகாவின் ஒட்டுமொத்த பாதிப்பில் 25.92 விழுக்காடாகும்.

இந்நிலையில், கர்நாடக அமைச்சர் மருத்துவர் சுதாகர், மாநில அரசு ஒவ்வொரு நோயாளிக்கும் சிறந்த மருத்துவம் அளிப்பதை தொடர்ந்து உறுதிசெய்யும் எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: கரோனா பரிசோதனை : சளி மாதிரியை சேகரிக்க ரோபோ வடிவமைத்த இளைஞர்

ABOUT THE AUTHOR

...view details