நாட்டின் மொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை குறித்த தகவலை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த 24 மணிநேரத்தில் 62 ஆயிரத்து 211 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 837 நபர்கள் கரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
நேற்று (அக்.16) 63 ஆயிரத்துக்கும் மேல் பாதிப்பு எண்ணிக்கை பதிவான நிலையில், இன்றைக்கு 62 ஆயிரத்து 211ஆக் பாதிப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது. கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ச்சியாக சரிவை சந்தித்து வருகிறது.
கோவிட் - 19 தற்போதைய நிலவரம்:
இதையடுத்து, நாட்டின் மொத்த நோய்த் தொற்று எண்ணிக்கை 74 லட்சத்தைத் தாண்டியுள்ளது. இதுவரை மொத்தம் 74 லட்சத்து 32 ஆயிரத்து 680 பேர் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது ஏழு லட்சத்து 95 ஆயிரத்து 87 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.