தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

3 மாதத்தில் முதல்முறையாக 50 ஆயிரத்துக்கும் குறைவான கரோனா பாதிப்பு

மூன்று மாத காலமாக இந்தியாவில் நாளொன்றுக்கு 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் கரோனா பாதிப்பு 46 ஆயிரமாக குறைந்துள்ளது.

COVID-19
COVID-19

By

Published : Oct 20, 2020, 12:16 PM IST

நாட்டின் கரோனா பாதிப்பு எண்ணிக்கை நிலவரத்தை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த 24 மணிநேரத்தில் 46 ஆயிரத்து 790 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் 587 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

கோவிட் - 19 தற்போதைய நிலவரம்

இதையடுத்து, நாட்டின் மொத்த நோய்த் தொற்று எண்ணிக்கை 76 லட்சத்தைத் நெருங்கியுள்ளது. இதுவரை மொத்தம் 75 லட்சத்து 97 ஆயிரத்து 063 பேர் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது ஏழு லட்சத்து 48 ஆயிரத்து 538 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

67 லட்சத்து 33 ஆயிரத்து 328 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும், நாட்டில் இதுவரை ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 197 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

பரிசோதனை நிலவரம்

கரோனா பரிசோதனை விவரம் குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் இன்று (அக்.20) வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 10 லட்சத்து 32 ஆயிரத்து 795 நபர்களுக்கு பரிசோதனை மேற்கொண்டுள்ளதாகவும், இதுவரை சுமார் ஒன்பது கோடியே 61 லட்சத்து 16 ஆயிரத்து 771 நபர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:குறையும் கரோனா: ஆனால், எச்சரிக்கும் உலக சுகாதார அமைப்பு!

ABOUT THE AUTHOR

...view details