தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கட்டுப்பாட்டிற்கு வருகிறதா கரோனா; இரண்டு மாதங்களில் குறைவான பாதிப்பு - வைரஸ் பரவல் தீவிரம் குறைந்துவருகிறது

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 55 ஆயிரத்து 342 நபர்களுக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், வைரஸ் பரவல் தீவிரம் குறைந்துவருகிறது.

COVID-19
COVID-19

By

Published : Oct 13, 2020, 11:59 AM IST

நாட்டில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை நிலவரத்தை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த 24 மணிநேரத்தில் 55 ஆயிரத்து 342 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் 706 நபர்கள் கரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

கோவிட் - 19 தற்போதைய நிலவரம்

இதையடுத்து, நாட்டின் மொத்த நோய்த் தொற்று எண்ணிக்கை 71 லட்சத்தைத் தாண்டியுள்ளது. இதுவரை மொத்தம் 71 லட்சத்து 75 ஆயிரத்து 881 பேர் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது எட்டு லட்சத்து 38 ஆயிரத்து 729 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.62 லட்சத்து 27 ஆயிரத்து 296 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும், நாட்டில் இதுவரை ஒரு லட்சத்து ஒன்பதாயிரத்து 856 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் மாதத்திற்குப் பின் மிகக் குறைவான பாதிப்பு நாட்டில் தற்போது பதிவாகியுள்ளது. கடந்த 45 நாட்களாக, நாளொன்றுக்கு சுமார் ஒரு லட்சத்தை நெருங்கி பாதிப்புகள் பதிவாகிவந்த நிலையில் தற்போது படிப்படியாக குறைந்துவருகிறது. இதன் மூலம் வைரஸ் பரவல் தீவிரத்தனமை குறைந்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை புள்ளிவிவரம்

பரிசோதனை நிலவரம்

கரோனா பரிசோதனை விவரம் குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் இன்று (அக்.13) வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் பத்து லட்சத்து 73 ஆயிரத்து 014 நபர்களுக்கு பரிசோதனை மேற்கொண்டுள்ளதாகவும், இதுவரை சுமார் எட்டு கோடியே 89 லட்சத்து 45 ஆயிரத்து 107 நபர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:தற்சார்பு இந்தியா பொருளாதார நிதிச்சலுகை பெரும் தோல்வி: காங்கிரஸ் தாக்கு

ABOUT THE AUTHOR

...view details