இந்தியாவில் கரோனா வைரஸின் பாதிப்பு தீவிரமாகப் பரவிவரும் நிலையில், நாட்டிலேயே முதலில் பாதிப்பு ஏற்பட்ட கேரளாவில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அம்மாநிலத்தில் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள், பொதுப் போக்குவரத்து ஆகியவற்றுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், கரோனா பாதிப்பில் முடங்கியுள்ள மாநிலத்தைச் சீராக்கும் விதமாக அரசு 20 ஆயிரம் கோடி ரூபாய் சிறப்பு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கரோனா பாதிப்பால் ஊரக வேலைவாய்ப்பு பெரிதும் முடங்கியுள்ளதால், அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருக்க குடும்பஸ்ரீ திட்டம் மூலம் 2 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.