கர்நாடக மாநிலத்தில் கரோனா பாதிப்பிற்கான பிளாஸ்மா சிகிச்சைக்கான முதல்கட்ட ஒப்புதலை அம்மாநில சுகாதாரத் துறை அளித்துள்ளது. இதையடுத்து கர்நாடக சுகாதாரத் துறை அமைச்சர் ஸ்ரீராமுலு பெங்களுரூவில் உள்ள பி.எம்.சி விக்டோரியா மருத்துவமனையில் தொடங்கிவைத்தார்.
இந்தியாவில் கரோனா பாதிப்பு சிகிச்சைக்காக ஹைட்ராக்ஸி குளோரோகுயின், மலேரியா, எச்ஐவி உள்ளிட்ட மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன.
கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவை பயன்படுத்தி சிகிச்சை மேற்கொள்வதால் நோயாளிகளின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றத்தை அளிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.