தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கரோனா பாதிப்பு: இஸ்ரோ ஊழியர்கள் ரூ.5 கோடி நிதியுதவி! - இஸ்ரோ ஊழியர்கள் ரூ.5 கோடி நிதியுதவி

பெங்களுரு: கரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக நாடு போராடி வரும் நிலையில் இஸ்ரோ ஊழியர்கள் தங்களின் ஒருநாள் சம்பளத்தை நாட்டுக்காக அர்ப்பணித்துள்ளனர்.

COVID-19:  ISRO  ISRO/DOS  ISRO pledges Rs 5 cr  PM-CARES Fund  coronavirus pandemic  கரோனா பாதிப்பு: இஸ்ரோ ஊழியர்கள் ரூ.5 கோடி நிதியுதவி  இஸ்ரோ ஊழியர்கள் ரூ.5 கோடி நிதியுதவி  கரோனா நிதியுதவி
COVID-19: ISRO ISRO/DOS ISRO pledges Rs 5 cr PM-CARES Fund coronavirus pandemic கரோனா பாதிப்பு: இஸ்ரோ ஊழியர்கள் ரூ.5 கோடி நிதியுதவி இஸ்ரோ ஊழியர்கள் ரூ.5 கோடி நிதியுதவி கரோனா நிதியுதவி

By

Published : Apr 3, 2020, 1:32 PM IST

கரோனா பெருந்தொற்றுக்கு எதிராக நாடு போராடி வருகிறது. கடந்த மாதம் 22ஆம் தேதி அறிவிக்கப்பட்ட மக்கள் ஊரடங்குக்கு இரு நாட்களுக்குப் பின் 25ஆம் தேதி முதல் 21 நாள்களுக்கு (ஏப்ரல்14 வரை) நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

மக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர். இந்த பாதிப்பை சரி செய்யும் வகையில் மத்திய, மாநில அரசுகள் நிதி வழங்க வேண்டி மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையடுத்து பொதுமக்கள், ராணுவ வீரர்கள், விஞ்ஞானிகள், தொழில்நுட்ப வல்லுனர்கள், மத்திய, மாநில அரசு ஊழியர்கள், நடிகர், நடிகையர்கள் என பலரும் தங்களால் இயன்ற நிதி உதவியை அளித்துவருகின்றனர்.

இந்நிலையில் இஸ்ரோ சார்பில் ஊழியர்களின் ஒருநாள் ஊதியத் தொகை ரூ.5 கோடியை, நிதி உதவியாக அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து இஸ்ரோ வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கரோனாவின் நெருக்கடியை எதிர்கொள்ளும் வகையில் ஒட்டுமொத்த தேசமும் ஒற்றுமையாக இருக்க வேண்டிய தருணம் இது.

இஸ்ரோ விஞ்ஞானிகள் அத்தியாவசிய மருத்துவ சாதனங்கள் வழங்க ஆராய்ச்சி செய்துவருகின்றனர். கரோனா பாதிப்பை சமாளிக்கும் வகையில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (இஸ்ரோ) ஊழியர்கள் தங்களின் ஒருநாள் சம்பளமான ரூ.5 கோடியை பிரதமரின் பொதுநிவாரண நிதிக்கு நன்கொடையாக அளிக்கின்றனர்” என கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கரோனா அச்சுறுத்தல்: ஜம்மு காஷ்மீருக்கு 4ஜி சேவை வழங்க கோரி பொதுநல வழக்கு!

ABOUT THE AUTHOR

...view details