பிளாஸ்மா சிகிச்சையின் வழிகாட்டு நெறிமுறைகளை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்டுள்ளது. அதில், கரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்கையினை கண்மூடித்தனமாக பயன்படுத்துவதிலிருந்து விலகுமாறு மாநிலங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
ஐசிஎம்ஆர் இந்தியாவில் 39 பொது, தனியார் மருத்துவமனைகளில் அமைந்திருக்கும் ஆய்வகத்தில் இரண்டாம் கட்ட மல்டிசென்டர் சீரற்ற கட்டுப்பாட்டு சோதனையை கரோனா நோயாளிகளிடம் மேற்கொண்டது. பிளாசிட் என்பது சிபிடி பற்றிய உலகின் மிகப்பெரிய நடைமுறை சோதனை ஆகும். இதன்மூலம் கரோனா நோயாளிகளுக்கு எந்தப் பலனும் கிடைக்கவில்லை என்று ஐசிஎம்ஆர தெரிவித்துள்ளது.
சீனாவிலும் நெதர்லாந்திலும் நடத்தப்பட்ட இதேபோன்ற ஆய்வுகள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கரோனா நோயாளிகளின் மருத்துவ விளைவுகளை மேம்படுத்துவதில் சிபிடியின் குறிப்பிடத்தக்க நன்மைகளை ஆவணப்படுத்தவில்லை என்றும் ஐசிஎம்ஆர் குறிப்பிட்டுள்ளது. எனவே சிபிடியை கண்மூடித்தனமாக பயன்படுத்துவது நல்லதல்ல என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.