இந்தியாவில் கரோனா வைரஸினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது. அதன் ஒருபகுதியாக கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 83 ஆயிரத்து 809 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் நாட்டில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 49 லட்சத்து 30ஆயிரத்து 237ஆக அதிகரித்துள்ளது.
இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 2, 91, 630 பேரும், கர்நாடகாவில் 98 ஆயிரத்து 482 பேரும், தமிழ்நாட்டில் 46ஆயிரத்து 912 பேரும் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மேலும், நாடு முழுவதும் 38 லட்சத்து 59 ஆயிரத்து 400 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.