இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 38 ஆயிரத்து 902 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. சிகிச்சைப் பலனின்றி 543 பேர் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 26,816ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் மொத்த கரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 10 லட்சத்து 77 ஆயிரத்து 618ஆக உயர்ந்துள்ளது. கரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்து 77 ஆயிரத்து 423ஆக உயர்ந்துள்ளது. தற்போது கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவோரின் எண்ணிக்கை 3 லட்சத்து 73 ஆயிரத்து 379 ஆகும்.
மாநிலங்கள் வாரியாக கரோனா பாதிப்பு
இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தில்தான் அதிகளவில் கரோனா பாதிப்பு உள்ளது. கரோனாவால் மகாராஷ்டிராவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3 லட்சத்து 937ஆக அதிகரித்துள்ளது.
மாநிலங்கள் வாரியாக கரோனா பாதிப்பு டெல்லியில், ஒரு லட்சத்து 21 ஆயிரத்து 582 பேர், தெலங்கானாவில் 43 ஆயிரத்து 780 பேர், குஜராத்தில் 47 ஆயிரத்து 390 பேர், உத்தரப் பிரதேசத்தில் 47 ஆயிரத்து 36 பேர், ஆந்திராவில் 44 ஆயிரத்து 609 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் அந்தமான் தீவுகளில்தான் மிக குறைவாக கரோனா பாதிப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்று (ஜூலை 19) கணக்கின்படி, அந்தமானில் 198 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு கரோனா உயிரிழப்பு எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இந்தியாவில் 1 மில்லியன் பேருக்கு கரோனா வைரஸ் தொற்று!