இந்தியாவில் கரோனா தொற்றின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், இறப்பு எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
குறிப்பாக மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி, தெலங்கானா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் கரோனா பாதிப்பு உச்சத்தை தொட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை மாநிலங்களின் பாதிப்பு விவரத்தை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 4 ஆயிரத்து 244 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் ஆயிரத்து 168 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதன் மூலம் கரோனா பாதிப்பின் எண்ணிக்கை 1 லட்சத்து 38 ஆயிரத்து 470 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 77ஆயிரத்து 338ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை 46ஆயிரத்து 972 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 89 ஆயிரத்து 532 பேர் குணமடைந்துள்ளனர். மேலும், இறந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 966 ஆக உயர்ந்துள்ளது.
மகராஷ்டிரா
நாட்டில் கரோனா பாதிப்பில் மகராஷ்டிரா மாநிலம் முதலிடத்தை பெற்றிருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் ஏழு ஆயிரத்து 827 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கரோனா பாதிப்பாளர்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்து 54 ஆயிரத்து 427ஆக உயர்ந்துள்ளது.
24 மணி நேரத்தில் 173 பேர் கரோனா பாதிப்பால் உயிரிழந்த நிலையில், இறப்பு எண்ணிக்கை பத்து ஆயிரத்து 289 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை, ஒரு லட்சத்து 40ஆயிரத்து 325 பேர் பூரண குணமடைந்துள்ளனர். ஒரு லட்சத்து மூன்று ஆயிரத்து 813 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
டெல்லி
தலைநகர் டெல்லியில் ஆயிரத்து 573 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், கரோனா பாதிப்பாளர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 494 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 37 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர். மொத்த இறப்பு எண்ணிக்கை மூன்று ஆயிரத்து 371 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 89 ஆயிரத்து 968 பேர் குணமடைந்துள்ளனர். 19 ஆயிரத்து 155 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.