இந்தியாவில் கரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. வைரஸைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் மத்திய, மாநில அரசுகள் தீவிராக களமிறங்கியுள்ளன.
இந்தியாவில் 8 லட்சத்தை நெருங்கும் கரோனா பாதிப்பு!
டெல்லி: நாட்டில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8 லட்சத்தை நெருங்கியுள்ளது.
இந்நிலையில், மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், " கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7 லட்சத்து 93 ஆயிரத்து 802ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை 21 ஆயிரத்து 604ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோரின் எண்ணிக்கை 4 லட்சத்து 95 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளனர்.
குறிப்பாக, மகாராஷ்டிரா மாநிலத்தில், கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 லட்சத்து 30 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக தமிழ்நாடு மாநிலத்தில் கரோனா பாதிப்பு 1 லட்சத்து 26 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.