இன்று காலை எட்டு மணி நிலவரப்படி, நாடு முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இரண்டு லட்சத்து 56 ஆயிரத்து 611 ஐ எட்டியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில்,மொத்தம் ஒரு லட்சத்து 24 ஆயிரத்து 95 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும், ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 381 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை ஏழாயிரத்து 135 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
இந்தியா முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் விவரம் மாநிலங்கள் வாரியாக கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கைக் குறித்த தகவல்களும் வெளியிடப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் மொத்தம் 31 ஆயிரத்து 667 பேர் பாதிக்கப்பட்டும், 16 ஆயிரத்து 999 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியும் உள்ளனர்.
மொத்தம் 14 ஆயிரத்து 399 பேர் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், 269 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதையும் படிங்க :75 நாள்களுக்குப் பின் திறக்கப்பட்ட வழிபாட்டுத் தலங்கள்