நாட்டில் நேற்று ஒரேநாளில் புதிதாக 3,561 பேருக்கு கரோனா வைரஸ் இருப்பது உறுதியானது. அதிகபட்சமாக, மகாராஷ்டிராவில் 1,233 பேரும், தமிழ்நாட்டில் 771 பேரும், டெல்லியில் 428 பேரும், குஜராத்தில் 380 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், நாட்டில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 52,952ஆக அதிகரித்துள்ளது.
அதேசமயம், இத்தொற்றால் நேற்று சிகிச்சை பலனின்றி 89 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 34 பேரும், குஜாராத்தில் 28 பேரும் உயிரிழந்தனர். இதன்மூலம், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,783ஆக அதிகரித்துள்ளது. மேலும், நேற்று 1,084 பேர் கரோனா வைரஸிலிருந்து குணமடைந்துள்ளனர். இதனையடுத்து, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 15,267ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.