மத்திய சுகாதாரத் துறையின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தின்படி கரோனாவால் பாதிப்புக்குள்ளானவர்களின் விவரம், "மே 3ஆம் தேதி மாலை 5 மணி நிலவரப்படி இந்தியாவில் இதுவரை 40 ஆயிரத்து 263 பேர் கரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆயிரத்து 306 பேர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக, மகாராஷ்டிரா, குஜராத் மாநிலங்கள் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களாக உள்ளன. அம்மாநிலங்களில் முறையே, 12 ஆயிரத்து 263, ஐந்து ஆயிரத்து 55 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கோவிட்-19 பாதிப்பு டாப் டூ மாநிலங்கள் விவரம் - மத்திய சுகாதாரத் துறை கரோனா பாதிப்பு
டெல்லி : ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி நாட்டில் இதுவரை 40 ஆயிரத்து 264 பேருக்கு கோவிட்-19 பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள சூழலில், டாப் டூ மாநிலங்களில் எத்தனைப் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்து தெரிந்துகொள்ளுங்கள்.

COVID19
டாப் டூ மாநிலங்களான மகாராஷ்டிரா, குஜராத்தில் மட்டும் பாதிப்பு எண்ணிக்கை 23 ஆயிரத்து 149 பேர் என்பது நாட்டின் ஒட்டுமொத்த பாதிப்பில் சுமார் 57 விழுக்காடு ஆகும். அதேபோன்று நாட்டில் இதுவரை 10 ஆயிரத்து 886 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்" எனக் கூறப்பட்டுள்ளது.