தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மாநிலங்கள்வாரியாக கரோனா பாதிப்பு விவரம் - கரோனா வைரஸ் செய்திகள்

நாட்டில் கரோனாவால் இதுவரை 33,050 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 1,074 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது மாநிலங்கள்வாரியாக கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள், உயிரிழந்தவர்கள், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை பார்க்கலாம்.

COVID-19 India tracker: State-wise report
COVID-19 India tracker: State-wise report

By

Published : Apr 30, 2020, 12:46 PM IST

மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி நாட்டில் நேற்று ஒரேநாளில் புதிதாக 1,718 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நிலையில், 67 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 33,050ஆகவும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1074ஆகவும் அதிகரித்துள்ளது. அதேசமயம், நேற்று ஒரேநாளில் இத்தொற்றால் பாதிக்கப்பட்ட 629 பேர் குணமடைந்ததன் மூலம். குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 8,325ஆக உயர்ந்துள்ளது.

மாநிலங்கள் வாரியாக கரோனா பாதிப்பு விவரம்

இந்தியாவில் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் மகாராஷ்டிராவில்தான் நிலைமை படுமோசமாக உள்ளது. அம்மாநிலத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்கிறது. இதுவரை 9,915 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 432 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது மாநிலங்கள் வாரியாக கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள், உயிரிழந்தவர்கள், குணமடைந்தவர்களின் எண்ணிக்கையைப் பார்ப்போம்.

மாநிலங்கள் பாதிப்புகள் உயிரிழப்புகள் குணமடைந்தவர்கள்
மகாராஷ்டிரா 9,915 432 1,593
குஜராத் 4,082 197 527
டெல்லி 3,439 56 1,092
மத்தியப் பிரதேசம் 2,561 129 461
ராஜஸ்தான் 2,438 51 768
தமிழ்நாடு 2,162 27 1,210
உத்தரப் பிரதேசம் 2,134 39 510
ஆந்திரப் பிரதேதம் 1,332 31 287
தெலங்கானா 1,012 26 367
மேற்கு வங்கம் 758 22 124
ஜம்மு காஷ்மீர் 581 8 192
கர்நாடகா 535 21 216
கேரளா 495 4 369
பீகார் 392 2 65
பஞ்சாப் 357 19 90
ஹரியானா 310 3 209
ஒடிசா 125 1 39
ஜார்க்கண்ட் 107 3 19
சண்டிகர் 56 0 17
உத்தரகாண்ட் 55 0 36
இமாச்சலப் பிரதேசம் 40 1 25
அசாம் 38 1 29
சத்தீஸ்கர் 38 0 34
அந்தமான் நிக்கோபர் தீவுகள் 33 0 15
லடாக் 22 0 16
மேகாலயா 12 1 0
புதுச்சேரி 8 0 3
கோவா 7 0 7
திரிபுரா 2 0 2
மணிப்பூர் 2 0 2
அருணாச்சலப் பிரதேசம் 1 0 1
மிசோரம் 1 0 0

இதையும் படிங்க:ஊசலாடும் முதலமைச்சர் பதவி: மோடியின் உதவியை நாடும் உத்தவ் தாக்கரே!

ABOUT THE AUTHOR

...view details