மாநிலங்கள் வாரியாக கரோனா பாதிப்பு விவரம் - கரோனா வைரஸ் சமீபத்திய செய்திகள்
இந்தியாவில் மகாராஷ்டிராவில்தான் கரோனா வைரஸால் அதிகமானோர் பாதிக்கப்பட்டும், உயிரிழந்தும் உள்ளனர். மகாராஷ்டிராவில் இதுவரை 9318 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 400 பேர் உயிரிழந்துள்ளனர்.
COVID-19 India tracker: State-wise report
By
Published : Apr 29, 2020, 3:13 PM IST
மத்திய சுகாதார அமைச்சகம் அளித்த தகவலின் படி, நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,897 பேருக்கு கரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 31,332ஆக அதிகரித்துள்ளது. அதேசமயம், இத்தொற்றால் 70 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
இதன்மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,007ஆக அதிகரித்துள்ளது. இதனிடையே, நேற்று ஒரேநாளில் இத்தொற்றால் 897 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 7,695ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மாநிலங்கள் வாரியாக கரோனா விவரம்
இந்தியாவில் மகாராஷ்டிராவில்தான் கரோனா வைரஸால் அதிகமானோர் பாதிக்கப்பட்டும், உயிரிழந்தும் உள்ளனர். மகாராஷ்டிராவில் இதுவரை 9318 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 400 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது மாநிலங்கள் வாரியாக கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள், உயிரிழந்தவர்கள், குணமடைந்தவர்களின் எண்ணிக்கையை பார்ப்போம்.