கரோனா வைரஸ் தொற்றுப் பரவலைத் தடுப்பதற்கு, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியாமல் மத்திய, மாநில அரசுகள் தவித்து வருகின்றன. தினந்தோறும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், "நாட்டில் கரோனா வைரஸ் தொற்றால் 9 ஆயிரத்து 152 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனா வைரசால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 308ஆக அதிகரித்துள்ளது.