இந்தியாவில் கோவிட்-19 பாதிப்பு: மாநிலங்கள் வாரியாக முழு விவரம் - மாநிலங்களில் கோவிட் 19 பாதிப்பு
டெல்லி: இந்தியாவில் கோவிட் 19 தொற்றால் இதுவரை ஆறாயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மாநிலங்கள் வாரியாக பாதிக்கப்படவர்களின் விவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
COVID-19 India tracker: State-wise report
By
Published : Apr 10, 2020, 1:08 PM IST
இந்தியாவில் கோவிட்-19 தொற்றால் நேற்று ஒருநாளில் 537 பேர் பாதிக்கப்பட்டுள்ளதால் இதன் மொத்த எண்ணிக்கை 6, 412ஆக உயர்ந்துள்ளது. இதனிடையே, கடந்த 12 மணி நேரத்தில் மட்டும் 30 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் மகாராஷ்டிராவில் 25 பேரும், டெல்லியில் மூன்று பேரும், குஜராத், ஜார்க்கண்டில் தலா ஒருவரும் அடங்குவர்.
இதனால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 199ஆக அதிகரித்துள்ளது. 472 பேர் சிகிச்சைக்கு பின்னர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் மாநில வாரியாக வெளியிட்டுள்ள புள்ளி விவர தகவலை காணலாம்.