நாட்டில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கடந்த எட்டு மாதங்களில் இல்லாத அளவு குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் எட்டாயிரத்து 635 பேர் மட்டுமே கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், கரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் 100-க்கும் கீழ் குறைந்துள்ளது.
8 மாதங்களில் இல்லாத அளவு குறைந்த கரோனா! - நாட்டில் கரோனா வைரஸ்
நேற்று (பிப்ரவரி 1) மட்டும் எட்டாயிரத்து 635 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதால், நாட்டில் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு கோடியே ஏழு லட்சத்து 66 ஆயிரத்து 245 ஆக அதிகரித்துள்ளது.
கரோனா
இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு கோடியே ஏழு லட்சத்து 66 ஆயிரத்து 245 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 54 ஆயிரத்து 486 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோரின் எண்ணிக்கை ஒரு கோடியே நான்கு லட்சத்து 48 ஆயிரத்து 406 ஆக உள்ளது.
இதுவரை மொத்தமாக 19 கோடியே 77 லட்சம் நபர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. நேற்று மட்டும் சுமார் ஆறு லட்சத்து 59 ஆயிரம் பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.