தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கோவிட்-19 : இந்தியாவில் தொடர்ந்து சரியும் பாதிப்பு எண்ணிக்கை - இந்தியா கோவிட்-19 பாதிப்பு எண்ணிக்கை

கடந்த 24 மணிநேரத்தில் 23 ஆயிரத்து 950 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் 333 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

COVID-19
COVID-19

By

Published : Dec 23, 2020, 12:38 PM IST

Updated : Dec 23, 2020, 12:50 PM IST

இந்தியாவில் அனைத்து பகுதிகளிலும் கோவிட்-19 பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி இந்தியாவில் தற்போது சிகிச்சைப் பெற்று வருவோரின் எண்ணிக்கை மூன்று லட்சத்துக்கும் குறைவாக உள்ளது.

இந்நிலையில், நாட்டின் கரோனா பாதிப்பு எண்ணிக்கை நிலவரத்தை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த 24 மணிநேரத்தில் 23 ஆயிரத்து 950 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் 333 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

கோவிட் - 19 தற்போதைய நிலவரம்

இந்தியாவில் இதுவரை மொத்தம் ஒரு கோடியே 99 ஆயிரத்து 66 பேர் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது இரண்டு லட்சத்து 89 ஆயிரத்து 240 பேர் சிகிச்சைப்பெற்று வருகின்றனர். 96 லட்சத்து 63 ஆயிரத்து 382 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும், நாட்டில் இதுவரை ஒரு லட்சத்து 46 ஆயிரத்து 444 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 48 ஆயிரத்து 876 பேர் உயிரிழந்துள்ளனர். அடுத்தபடியாக கர்நாடகாவில் 12 ஆயிரத்து 29 பேர், தமிழ்நாட்டில் 12 ஆயிரத்து 12 பேர், டெல்லியில் 10 ஆயிரத்து 329 பேர் உயிரிழந்துள்ளனர்.

பரிசோதனை நிலவரம்

கரோனா பரிசோதனை விவரம் குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் இன்று (டிச.23) வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 10 லட்சத்து 98 ஆயிரத்து 164 நபர்களுக்கு பரிசோதனை மேற்கொண்டுள்ளதாகவும், இதுவரை மொத்தமாக சுமார் 16 கோடியே 42 லட்சத்து 68 ஆயிரத்து 721 பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:நம் நாட்டில் இந்த நிலை என்று வரும்... பிரதமரிடம் ராகுல் கேள்வி!

Last Updated : Dec 23, 2020, 12:50 PM IST

ABOUT THE AUTHOR

...view details