தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கோவிட்-19 நிலவரம்: ஒரே நாளில் 13,083 பேருக்கு பாதிப்பு - இந்தியாவில் கரோனா உயிரிழப்பு

நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 13 ஆயிரத்து 83 நபர்களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் 137 பேர் கரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்தனர்.

COVID-19
COVID-19

By

Published : Jan 30, 2021, 2:31 PM IST

நாட்டின் கரோனா பாதிப்பு எண்ணிக்கை நிலவரத்தை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் (ஜன.30) வெளியிட்டுள்ளது. அதன்படி, நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 13 ஆயிரத்து 083 நபர்களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் 137 பேர் கரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்தனர்.

கோவிட் - 19 நிலவரம்

இந்தியாவில், இதுவரை ஒரு கோடியே ஏழு லட்சத்து 33 ஆயிரத்து 131 பேர் கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது ஒரு லட்சத்து 69 ஆயிரத்து 824 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். நாட்டில் இதுவரை ஒரு லட்சத்து 54 ஆயிரத்து 147 பேர் கரோனாவால் உயிரிழந்தனர்.

பரிசோதனை நிலவரம்

கரோனா பரிசோதனை விவரம் குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் இன்று (ஜன. 30) வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 7 லட்சத்து 56 ஆயிரத்து 329 நபர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதுவரை மொத்தம் 19 கோடியே 58 லட்சத்து 37 ஆயிரத்து 408 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதுவரை சுமார் 33 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:அமித் ஷாவின் மேற்கு வங்க பயணம் திடீர் ரத்து; பின்னணி என்ன?

ABOUT THE AUTHOR

...view details