சீனாவை ஆட்டிப் படைத்த கொரோனா தொற்றுநோய் இந்தியாவிலும் பரவி வருகிறது. ஒரு எல்லையிலிருந்து மற்றொரு எல்லைக்கு இந்நோய் எளிதில் வர முக்கிய காரணம் பயணங்கள். இதனைக் கணக்கில் கொண்ட இந்திய அரசு சில நாடுகளுக்கான பயணங்களுக்கு தடை விதித்தது.
இந்த தடையானது மார்ச் 13ஆம் தேதி நள்ளிரவில் இருந்து, ஏப்ரல் 15ம் தேதி வரை செயல்பாட்டில் இருக்கும் என்று மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது. இதில், அரசு தொடர்பான பயணங்கள், வேலைவாய்ப்பு, சர்வதேச அமைப்புகள் உள்ளிட்டவைகளுக்கு மட்டும் தற்போது விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. சில அதிகாரிகளுக்கும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இதைப் போல, உள்நாட்டுக்கு வரும் பயணிகளுக்கும் சில விதிமுறைகள் அளிக்கப்பட்டது. இதன்படி, சீனா, இத்தாலி, ஈரான், தென் கொரியா, பிரான்ஸ், ஸ்பெயின், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளின் பயணிகள் பிப்ரவரி 15ஆம் தேதிக்கு பிறகு பயணம் மேற்கொண்டவர்கள், அங்கியிருந்து இந்தியா வந்த பயணிகள் ஆகியோரை 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தி கண்காணிக்கவும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.