நாடு முழுவதும் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகளவில் உள்ளது. வைரஸ் தடுப்பு பணியில் மத்திய மாநில அரசுகள் தீவிரமாக களமிறங்கியுள்ளனர். அந்த வரிசையில், தலைநகர் டெல்லியில் கடந்த சில நாள்களாக கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தினந்தோறும் தொற்றால் பாதிக்கப்பட்டுவோரின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டுகிறது.
டெல்லியில் கரோனாவை எதிர்கொள்ள பிசிஆர் பரிசோதனைகள் அதிகரிப்பு! - டெல்லி ஆர்டி பிசிஆர் பரிசோதனைகள்
டெல்லி: தலைநகரில் கரோனா பாதிப்பு அதிகரிப்பதை தொடர்ந்து, பரவலை தடுக்க அதிகப்படியான ஆர்டி-பிசிஆர் பரிசோதனைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இதைக் கருத்தில் கொண்டு, கரோனா பரவலை தடுத்திட ரெபிட் அண்டிஜேன் பரிசோதனை விட ஆர்-பிசிஆர் பரிசோதனையை அதிகரித்துள்ளதாக உள்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.
இதுமட்டுமின்றி, 250 வென்டிலேட்டர்கள் கூடுதலாக டிஆர்டிஓ மருத்துவமனையில் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், வீடு வீடாக சென்று ஆய்வு மேற்கொண்டதில், மூன்றரை லட்சம் பேர் பரிசோதிக்கப்பட்டுள்ளனர். நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிப்பதை தொடர்ந்து, எய்ம்ஸ் மருத்துவமனையில் கூடுதலாக 200 ஜூனியர் மருத்துவர்களை நியமிக்க திட்டமிட்டுள்ளனர். தலைநகரில் டெல்லியில் கரோனாவை கட்டுபாட்டுக்குள் கொண்டு வர, மூத்த அலுவலர்கள் பல்வேறு ஆலோசனை கூட்டங்களும் நடைபெற்று வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில், 5 ஆயிரத்து 879 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.111 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.