தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கோவிட்-19 எதிரொலி: கல்வியில் புதிய கருவிகளின் தேவை குறித்து நிதிக்குழு ஆலோசனை! - நிதிக்குழு

டெல்லி: கரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு மத்தியில் கல்வியில், ஆன்லைன் வகுப்புகள் மற்றும் பிற தொழில்நுட்பங்களை பயன்படுத்துதல் குறித்து 15ஆவது நிதிக்குழு ஆலோசனை நடத்தியது.

COVID-19 impact Finance Commission Tools for education Stimulus package HRD Ministry Coronavirus pandemic கோவிட்-19 கல்வியில் புதிய கருவிகள் ஆன்லைன் வகுப்புகள் நிதிக்குழு மனிதவள மேம்பாட்டு அமைச்சகம்
COVID-19 impact Finance Commission Tools for education Stimulus package HRD Ministry Coronavirus pandemic கோவிட்-19 கல்வியில் புதிய கருவிகள் ஆன்லைன் வகுப்புகள் நிதிக்குழு மனிதவள மேம்பாட்டு அமைச்சகம்

By

Published : Jun 30, 2020, 8:19 AM IST

Updated : Jun 30, 2020, 8:28 AM IST

டெல்லியில் 15ஆவது நிதிக்குழு திங்கள்கிழமை (ஜூன்30) ஆலோசனை நடத்தியது. அப்போது, கரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் ஆன்லைன் வகுப்புகள், பிற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவது மற்றும் கல்வியில் புதிய கருவிகளின் தாக்கம் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டன.

இந்தக் கூட்டத்துக்கு என்.கே. சிங் தலைமை வகித்தார். மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், இணையமைச்சர் மற்றும் மூத்த உயர் அலுவலர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

இதில், "ஆன்லைன் வகுப்புகள் மற்றும் கல்விக்கான பிற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துதல் உள்ளிட்ட கல்வியியல் புதிய கருவிகளின் தாக்கம் குறித்து விவாதிக்கப்பட்டது.

இதையடுத்து வெளியான அறிக்கையில், “கரோனா பெருந்தொற்று நெருக்கடி காரணமாக, புதிய கல்வி கருவிகளின் (ஆன்லைன் உள்ளிட்ட வசதிகள்) தேவை ஏற்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2020-21 மற்றும் 2025-26 ஆம் ஆண்டுகளுக்கான கல்வி விஷயத்தில் பரிந்துரைகளை வழங்குவதற்காக இந்த கூட்டத்திற்கு ஆணைக்குழு மிகவும் குறிப்பாக அழைப்பு விடுத்திருந்தது.

அப்போது, திருத்தப்பட்ட ஒரு குறிப்பை நிதி ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் பள்ளி கல்வி மற்றும் உயர் கல்வித் துறை ஆகியவற்றுடன் ஆணையம் ஒரு விரிவான கலந்துரையாடலை நடத்தியது.

இதையும் படிங்க: விசாகப்பட்டினம், சைனர் பார்மா விஷவாயு கசிவில் இருவர் உயிர் இழப்பு!

Last Updated : Jun 30, 2020, 8:28 AM IST

ABOUT THE AUTHOR

...view details